< Back
மாநில செய்திகள்
கிண்டியில் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம்
மாநில செய்திகள்

கிண்டியில் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம்

தினத்தந்தி
|
10 Oct 2024 9:46 PM IST

கல்லூரி மாணவர்களால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்தனர்.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் இருந்து குன்றத்தூர் நோக்கி மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து கிண்டி அருகே வந்தபோது கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறினர். அப்போது திடீரென ஒருசில மாணவர்கள் மேருந்தின் மேற்கூரை மீது ஏறினர்.

பேருந்து கிண்டி மேம்பாலம் அருகே சென்ற போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்தின் மேற்கூரையில் ஏறிய மாணவர்கள் நின்றபடி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

'ரூட்டு தல' விவகாரத்தில் சென்ட்ரல் ரெயில் நிலைய வாசலில் கொடூரமாக தாக்கப்பட்ட கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஐந்து மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் குறித்த பேச்சு அடங்குவதற்குள் கல்லூரி மாணவர்களின் அடுத்த அராஜகம் அரங்கேறியுள்ளது.

மேலும் செய்திகள்