< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
அரசு கல்லூரி விடுதி முன் மாணவர்கள் மோதல்
|24 Jun 2022 1:52 AM IST
அரசு கல்லூரி விடுதி முன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
திருச்சி:
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கவிசெல்வன்(வயது 22). இவர் அரசு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். சம்பவத்தன்று இவருடைய நண்பர் பூவரசனின் செல்போனை விடுதியில் உள்ள கபிலன் உள்ளிட்ட 6 பேர் பறித்துள்ளனர். இதை கவிசெல்வன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கபிலன் உள்ளிட்ட 6 பேர் கவிசெல்வனை கல்லால் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் 6 மாணவர்கள் மீதும் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மோதல் சம்பவத்தில் அனைவரும் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.