< Back
மாநில செய்திகள்
என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மோதல்: 4-ம் ஆண்டு மாணவருக்கு மண்டை உடைந்தது
சென்னை
மாநில செய்திகள்

என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மோதல்: 4-ம் ஆண்டு மாணவருக்கு மண்டை உடைந்தது

தினத்தந்தி
|
23 Feb 2023 10:22 AM IST

ஆவடி அருகே என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மோதலில் ஈடுப்பட்டனர்.

சென்னை அண்ணாநகர் மேற்கு, வசந்தம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தேஜா (வயது 21). இவர், ஆவடி அருகே உள்ள வேல்டெக் என்ஜினீயரி்ங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கல்லூரி வளாகத்துக்குள் உள்ள கேண்டீனில் தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் டீ குடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்த வரும் சென்னை அமைந்தகரை ரத்தினம்மாள் முதல் தெருவை சேர்ந்த தஷ்வந்த் (22) என்பவருக்கும், தேஜாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தஷ்வந்த், கீழே இருந்த கல்லை எடுத்து தேஜாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் தேஜாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 9 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தஷ்வந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்