< Back
மாநில செய்திகள்
மாணவ- மாணவிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாணவ- மாணவிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
31 July 2022 1:16 PM IST

மாணவ- மாணவிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2021-2022-ம் கல்வி ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, 2021-22 கல்வியாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதிதாக பதிவு செய்து கொள்ள www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் தங்களது அருகாமையில் உள்ள இ-சேவை மையம் வாயிலாகவும் அல்லது தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, ரேஷன்கார்டுகளுடன் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்