திருவாரூர்
விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
|விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-.
விளையாட்டு பயிற்சி
விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள், முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 8 மணிக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கலாம்
மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 20 வகையான தேர்வு போட்டிகளும், மாணவிகளுக்கு 19 வகையான தேர்வு போட்டிகளும் நடைபெற உள்ளது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை பதவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.