< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மாமல்லபுரம் அருகே பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் வெளியேறியதால் பரபரப்பு
|20 July 2022 12:44 PM IST
மாமல்லபுரம் அருகே அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் பள்ளி முன் குவிந்து நின்று கோஷமிட்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த மணமை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளியை புறக்கணித்து தங்களது பெற்றோர்களுடன் பள்ளி முன் குவிந்து நின்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு கானப்பட்டது.
தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசாரும் மணமை ஊராட்சி தலைவர் செங்கேனியும் பள்ளிக்கு சென்று மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் சமரசம் பேசி மாணவர்களை பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பகுதி நேர ஆசியர்கள் கேட்டிருப்பதாகவும். விரைவில் ஆசிரியர் போடப்படும் எனவும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.