< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
பள்ளிக்கூடம் முன்பு மின்மாற்றி அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு
|21 Oct 2023 12:15 AM IST
சங்கராபுரம் அருகே பள்ளிக்கூடம் முன்பு மின்மாற்றி அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு தொிவித்தனா்.
சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதி்ல் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சுற்றுச்சுவரையொட்டி புதிய மின்மாற்றி அமைக்க கம்பம் நடப்பட்டது. இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், பள்ளியின் முன்பு மின்மாற்றி அமைத்தால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என்றும், எனவே மின்மாற்றியை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்றும் கூறினர்.