< Back
மாநில செய்திகள்
வகுப்பை புறக்கணித்து மாணவர்கள்  போராட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
18 Aug 2023 11:34 PM IST

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை செங்கம் சாலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சமீபத்தில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகள் பல்வேறு குளறுபடிகளுடன் வெளி வந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து இன்று மதியம் கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மாணவர்களின் போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்