திருவாரூர்
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
|குடவாசல் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று நடக்கிறது
குடவாசல்;
குடவாசல் அரசு கல்லூரி முதல்வர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-குடவாசல் எம்.ஜி.ஆர். அரசு கல்லூரியில் இளங்கலை பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம் வணிகவியல், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டிற்கான மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுதாரர் ஆகியோருக்கு கலந்தாய்வு இன்று(புதன்கிழமை) கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. தொடர்ந்து மாணவர்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. 2- வது கட்ட கலந்தாய்வு 13-ந் தேதி நடைபெறுகிறது. மாணவர்கள் இணைய வழி விண்ணப்ப நகல், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, வகுப்பு சான்று, ஆதார் அட்டை, மாற்றுச்சான்றிதழ் அசல், நகல், புகைப்படம், எடுத்து வரவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.