திருவாரூர்
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
|திரு.வி.க. அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது
திருவாரூர்;
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருக்கிறது. நேரடி கலந்தாய்வு நடந்த முதல் நாளான நேற்று 28 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதில் விளையாட்டு பிரிவில் 20 பேர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 12 பேர், என்.சி.சி.பிரிவில் 1 ஒருவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.நாளை(திங்கட்கிழமை) வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை துறைக்கும், நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) அனைத்து கலை பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 2-ம் கட்ட கலந்தாய்வு 8-ந் தேதி(வியாழக்கிழமை) தொடங்குகிறது. அதில் 8-ந் தேதி தமிழ், ஆங்கில துறைக்கும், 9-ந் தேதி(வௌ்ளிக்கிழமை) அறிவியல் பிரிவுகளுக்கும், 12-ந் தேதி(திங்கட்கிழமை) வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை பிரிவுகளுக்கும், 13-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அனைத்து இதர கலைபிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.