< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
கரடி தாக்குதல் சம்பவம் எதிரொலிபள்ளி முடிந்து மாணவர்களை அழைத்து சென்ற வனத்துறையினர்
|29 July 2023 12:30 AM IST
சேந்தமங்கலம்:
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி நாடு ஊராட்சி கரையங்காடுபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து சற்று தூரத்தில் தான் நேற்று முன்தினம் கொல்லிமலையை சேர்ந்த 2 பேரை உணவு தேடி வந்த கரடி ஒன்று தாக்கிவிட்டு தப்பி ஓடியது.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் மாணவர்கள் பாதுகாப்பாக வீடு செல்வதற்காக பள்ளியில் இருந்து குறிப்பிட்ட எல்லை வரை வனத்துறை அலுவலர்கள் அழைத்து சென்று விட்டு வருகின்றனர்.