கள்ளக்குறிச்சி
10 பவுன் நகையுடன் மாணவி திடீர் மாயம்
|சின்னசேலம் அருகே 10 பவுன் நகையுடன் மாணவி திடீர் மாயம்
சின்னசேலம்
சின்னசேலம் அருகே உள்ள அனுமனந்தல் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் கவுசல்யா(வயது 23). இவருக்கும் தென்தொரசலூர் கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் அன்பு என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் கவுசல்யா சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். அப்போது தென்தெரசலூரில் இருந்து நயினார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பயிற்சி வகுப்புக்கு சென்று வர சிரமமாக இருந்ததால் அனுமனந்தல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்து கவுசல்யா பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று மாலை பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்த கவுசல்யா தனது கணவர் வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் கணவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை. மேலும் வீட்டில் இருந்த 10 பவுன் நகையையும் காணவில்லை. இதனால் 10 பவுன் நகைகளுடன் கவுசல்யா திடீரென மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கவுசல்யாவை தேடி வருகிறார்கள்.