< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
பிளஸ்-2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு
|9 May 2023 3:11 PM IST
பிளஸ்-2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி வர்ஷாவுக்கு ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் சென் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில், அச்சரப்பாக்கம் அடுத்த வெங்கடேசப்புரத்தை சேர்ந்த பா.ம.க பிரமுகர் லைன் முருகன் மகள் வர்ஷா பிளஸ்-2 பொது தேர்வில் 585 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளாா். பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி வர்ஷாவுக்கு தலைமை ஆசிரியர், பள்ளியின் தாளாளர், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.