< Back
மாநில செய்திகள்
அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்

தினத்தந்தி
|
29 May 2022 11:29 PM IST

அரசு அருங்காட்சியகத்தை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால பொருட்கள், பறவைகள், விலங்கினங்கள் குறித்த அரிய தகவல்கள், முதுமக்கள் தாழி, தொல்பொருட்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள் உள்ளிட்ட பழமையானவை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் அதிகம் பார்வையிட்டு ரசிப்பது வழக்கம். இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையில் அருங்காட்சியகத்தை பார்வையிட மாணவ-மாணவிகள் அதிகம் வருகை தருகின்றனர். இந்த நிலையில் இன்றும் சிறுவர்கள், மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்