< Back
மாநில செய்திகள்
மாணவி ஸ்ரீமதியின் செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு...!
மாநில செய்திகள்

மாணவி ஸ்ரீமதியின் செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு...!

தினத்தந்தி
|
20 Jan 2023 2:55 PM IST

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை அவரது தாய் செல்வி சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாணை நடத்தி வரும் நிலையில் மாணவியின் செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு பெற்றோருக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஐகோர்ட்டின் உத்தரவு படி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க விழுப்புரம் கோர்ட்டில் அவரது தாய் செல்வி இன்று வந்தார். அப்போது செல்போனை தாம் பெற்றுக் கொள்ள முடியாது. சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் தலைமைக்குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து செல்வி, தனது மகள் ஸ்ரீமதி பயன்படுத்திய கைப்பேசியை சிபிசிஐடி விசாரணை அலுவலரிடம் ஒப்படைக்கச் சென்றார். பின்னர், விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஸ்ரீமதியின் செல்போனை அவர் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்