< Back
மாநில செய்திகள்
விபத்தில் கல்லூரி மாணவர் பலி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

விபத்தில் கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
7 Jun 2023 12:15 AM IST

விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

ராமநாதபுரம் அருகே தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்த அமர் என்பவரின் மகன் அன்வர்தீன் (வயது 21). ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரி மாணவரான இவர் கல்லூரி தேர்வு எழுத மோட்டார் சைக்கிளில் சென்றார். ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூரியூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது இவரின் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவர் அன்வர்தீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் நகர் போலீசார், சரக்கு வாகன டிரைவர் பனையங்கால் கிராமத்தை சேர்ந்த ஜான்விக்டர் (47) என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்