< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
மாணவி பாலியல் பலாத்காரம்; சாமியார் கைது
|22 Jun 2022 1:28 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 28). சாமியாரான இவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் குறி சொல்லி வந்தார். இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறிந்து அந்த மாணவியின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இது தொடர்பாக பிரசாந்த்தை கைது செய்த போலீசார் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.