< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பிளஸ்-2 மாணவர்
|9 Aug 2022 10:49 PM IST
வைகை ஆற்றில் அடித்து பிளஸ்-2 மாணவர் செல்லப்பட்டார்.
திருப்புவனம்,
பூவந்தி அருகே உள்ள தி.அதிகரை கிராமத்தை பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் வைகை ஆற்றுக்கு குளிக்க சென்றார். ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குளித்து கொண்டிருந்த மாணவர் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் மாணவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மீண்டும் அவரை ேதடும் பணி நடைபெற உள்ளது.