< Back
தமிழக செய்திகள்
டிராக்டர் மோதி மாணவன் பலி
கள்ளக்குறிச்சி
தமிழக செய்திகள்

டிராக்டர் மோதி மாணவன் பலி

தினத்தந்தி
|
25 April 2023 12:15 AM IST

தியாகதுருகம் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் மாணவன் பலியானான்.

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே உள்ள புதுஉச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 43). இவரது மகன் நேதாஜி(14). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நேதாஜி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக நேதாஜி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேதாஜி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்