< Back
மாநில செய்திகள்
3-வது மாடியில் இருந்து தவறி விழுந்துபாலிடெக்னிக் மாணவா் பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்துபாலிடெக்னிக் மாணவா் பலி

தினத்தந்தி
|
12 July 2023 12:15 AM IST

குமாரபாளையம் அருகே முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க பேனர் கட்டிய போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குமாரபாளையம்

பாலிடெக்னிக் மாணவர்

திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்தவர் அரசப்பன். இவரது மகன் மதுரை வீரன் (வயது 20). இவர் குமாரபாளையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வரவேற்பு அளிப்பதற்காக கல்லூரி வளாகத்தில் பேனர்கள் கட்டி அலங்காரம் செய்து வந்தனர். மாணவர் மதுரைவீரனும் 3-வது மாடியில் ஏறி பேனர் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் தவறி கீழே விழுந்தார்.

பரிதாப சாவு

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மதுரைவீரனை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மதுரைவீரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தகவல் அறிந்து வந்த மாணவர் மதுரைவீரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது அருகில் இருந்தவர்களையும் கண்கலங்க செய்தது.

முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க பேனர் கட்டியபோது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்