< Back
மாநில செய்திகள்
விருத்தாசலத்தில்  ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயம்
கடலூர்
மாநில செய்திகள்

விருத்தாசலத்தில் ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயம்

தினத்தந்தி
|
11 Aug 2022 10:53 PM IST

விருத்தாசலத்தில் ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயமடைந்தாா்.


விருத்தாசலம்,

விருத்தாசலம் லூகாஸ் தெருவை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலையில் மாணவர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். இறைவழிபாட்டு கூட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது, மாணவர் சரியாக நிற்கவில்லை என்று கூறி உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.


இதில் மாணவரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்