< Back
மாநில செய்திகள்
மாணவி மயங்கி விழுந்து சாவு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

மாணவி மயங்கி விழுந்து சாவு

தினத்தந்தி
|
24 May 2022 12:10 AM IST

ஆம்பூர் பஸ் நிலையத்தில் மாணவி மயங்கி விழுந்து சாவு

ஆம்பூர்

வேலூர் மாவட்டம் பாக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகள் மோனிகா (வயது 14). அதேப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்தநிலையில் நேற்று மோனிகா தனது தந்தையுடன் பேரணாம்பட்டு பகுதிக்கு செல்ல ஆம்பூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தாள். அப்போது திடீரென மோனிகா மயங்கி விழுந்தாள்.

உடனடியாக அவரது தந்தை மற்றும் அப்பகுதி மக்கள் மாணவியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்