< Back
மாநில செய்திகள்
ஆற்றில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்பு
திருச்சி
மாநில செய்திகள்

ஆற்றில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்பு

தினத்தந்தி
|
31 May 2023 2:45 AM IST

ஆற்றில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

லால்குடி:

லால்குடி அருகே உள்ள இடையாற்றுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கஸ்பர் மோகன்ராஜ். இவரது மகனான ஆண்டோ(வயது 17), பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் இவர் கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது, நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அவரை தேடினர். இரவு நேரமானதையடுத்து, தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மீண்டும் அவரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இதில் ஆண்டோவை ஆற்றில் இருந்து பிணமாக மீட்டனர். இது குறித்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கார்த்திகேயனி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆண்டோவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது பற்றி தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் மற்றும் கோட்டாட்சியர் வைத்தியநாதன் ஆகியோர், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்