< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
ஏரியில் மூழ்கி மாணவர் பலி
|12 Jun 2023 11:02 PM IST
மேல்பாடி அருகே ஏரியில் மூழ்கி மாணவர் பலியானார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடியை அடுத்த சின்ன ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஆதி என்கிற பாலமுருகன் (வயது 14). விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து காலைக்கடன் முடிப்பதற்காக கொடுக்கந்தாங்கல் ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு கை, கால்களை கழுவுவதற்காக ஏரியில் இறங்கியுள்ளார். அப்போது நிலைதடுமாறி ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேல்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், செல்வராஜ் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.