< Back
மாநில செய்திகள்
வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு
ஈரோடு
மாநில செய்திகள்

வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு

தினத்தந்தி
|
26 March 2023 3:06 AM IST

சாவு

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு காமதேனு நகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 34). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருடைய மகன் தர்ஷன் (13). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்ஷன் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர், தன்னுடன் படிக்கும் கவுதம் என்ற மாணவருடன் சேர்ந்து காலிங்கராயன் வாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது வாய்க்கால் படிக்கட்டில் அமர்ந்தபடி குளித்துகொண்டிருந்த தர்ஷன் நிலைதடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்து விட்டார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுமார் 3 மணி நேரம் தேடலுக்கு பின்னர் தர்ஷனின் உடலை மீட்டனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்