< Back
மாநில செய்திகள்
ஆரணியில் பாம்பு கடித்து பள்ளி மாணவர் சாவு; தம்பிக்கு தீவிர சிகிச்சை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆரணியில் பாம்பு கடித்து பள்ளி மாணவர் சாவு; தம்பிக்கு தீவிர சிகிச்சை

தினத்தந்தி
|
6 Oct 2022 2:09 PM IST

ஆரணியில் பாம்பு கடித்து பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது தம்பி்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தூங்கி கொண்டிருந்தனர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி எஸ்.பி.கோவில் தெருவில் வசித்து வருபவர் பாபு. பெயிண்டர். இவரது மகன்கள் ரமேஷ் (வயது 14), தேவராஜ் (13). இவர்களில் ரமேஷ் 9-ம் வகுப்பும், தேவராஜ் 8-ம் வகுப்பும் அங்குள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தங்களது குடிசையில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது பாம்பு ஏதோ ஊர்ந்து செல்வதை உணர்ந்த பாபு மின் விளக்கை எரிய விட்டு பார்த்தபோது பாம்பு ஒன்று நெளிந்து சென்றதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக தங்களது 2 மகன்களையும் அருகில் இருந்த வீட்டில் கொண்டு சென்று பாதுகாப்பாக படுக்க வைத்தார்.

சாவு

விரைந்து வந்த அவர் அந்த பாம்பை அடித்துக்கொன்றார். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்தவர்கள் ரமேஷ், தேவராஜ் இருவரையும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக கூறினர். தேவராஜ்க்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்