< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பலி

தினத்தந்தி
|
25 Oct 2023 1:48 AM IST

சேரன்மாதேவி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பலியானார்.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியை அடுத்த பட்டங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பலவேசம் மகன் பிரதீப் (வயது 14). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பட்டங்காட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பிரதீப் கங்கணாங்குளம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழவே பிரதீப் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதில் படுகாயம் அடைந்த பிரதீப்பை உறவினர்கள் ஆட்டோ மூலம் மீட்டு, சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சேரன்மாதேவி போலீசார் ஆஸ்பத்திரிக்குச் சென்று பிரதீப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்