< Back
மாநில செய்திகள்
பொன்னேரி அருகே பள்ளியில் வழுக்கி விழுந்து மாணவன் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பொன்னேரி அருகே பள்ளியில் வழுக்கி விழுந்து மாணவன் பலி

தினத்தந்தி
|
31 March 2023 6:00 PM IST

பொன்னேரி அருகே பள்ளியில் வழுக்கி விழுந்த மாணவன் பலியானார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவன் பலி

பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சியில் உள்ள அச்சரப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி சதீஷ்குமார் (வயது 40). இவரது மகன் பிரத்தீஸ்வரன் (13) பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மதியம் 3 மணி அளவில் பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்ற பிரத்தீஸ்வரன் அங்கே வழுக்கி விழந்து தலையில் படுகாயம் அடைந்ததாகவும், பின்னர் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாகவும் பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே பெற்றோர் மற்றும் போலீசர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். பின்னர் போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இதற்கிடையே தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பொன்னேரி தாலுகா அலுவலகம் செல்லும் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி மாணவன் பிரத்தீஸ்வரன் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களும், பொதுமக்களும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பள்ளி மாணவன் சாவு குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பொன்னேரி மெதூர் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்