< Back
மாநில செய்திகள்
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு

தினத்தந்தி
|
14 Jun 2022 10:56 PM IST

கிருஷ்ணகிரி அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் இறந்தான்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டியை சேர்ந்தவர் திம்மராயசாமி. இவரது மகன் சாந்தன் (வயது 12). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 11-ந் தேதி இவன் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து மாணவன் தவறி கீழே விழுந்தான். இதில் படுகாயம் அடைந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் சாந்தன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்