< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
|31 March 2023 4:04 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் ஸ்வேதா (வயது 19). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியின் விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஸ்வேதா சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி விடுதி அறையில் மாணவி ஸ்வேதா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து ஸ்வேதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.