< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை
|26 Sept 2023 3:35 AM IST
தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 49). இவரது மகன் சுரேஷ்குமார் (19). இவர் தனியார் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பெரியவர்கள் வெளியே சென்று இருந்த போது சமையல் அறையில் சுரேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு சுரேஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.