< Back
தமிழக செய்திகள்
விஷம் குடித்து மாணவர் தற்கொலை
தஞ்சாவூர்
தமிழக செய்திகள்

விஷம் குடித்து மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
13 Sept 2023 12:41 AM IST

விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கபிஸ்தலம் அருகே விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

12-ம் வகுப்பு மாணவர்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அளவந்திபுரம் மதகடி தெருவை சேர்ந்த நாகேந்திரன் மகன் அஸ்வின் (வயது16). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

சமீப காலமாக இவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக கூறி குடும்பத்தினர் திட்டி உள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அஸ்வின், கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வின் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்