குடும்ப வறுமை: ரஷ்யாவில் மேற்படிப்பைத் தொடர முடியாததால் மாணவி தற்கொலை முயற்சி
|நாகை அருகே தனது குடும்ப வருமையின் காரணமாக ரஷ்யாவில் மருத்துவபடிப்பை தொடர முடியாத மருத்துவ மாணவி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நாகை:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன் புலம் 3-ம் சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி பார்வதி. இவர் 100 நாள் வேலைக்கு செல்பவர். இவர்களுக்கு கிருத்திகா என்கிற மகள் உள்ளார். இவர் அரசுப் பள்ளியில் படித்து 12-ம் வகுப்பில் 1050 மார்க் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவர்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். மேலும் கிருத்திகா அதிக மதிப்பெண் பெற்ற நிலையில் அவரது தோழிகள் சிலர் குறைந்த செலவில் ரஷ்யாவில் மருத்துவ படிப்பை படிக்கலாம் என்று கூறியுள்ளனர். அதன் பேரில் கிஷ்ணமூர்த்தியும் தனது சக்திக்கு மீறி மகளை படிக்க வைக்க நினைத்தார்.
பின்னர் தனது மகள் கிருத்திகாவை 2018-ல் ரஷ்யாவில் மருத்துவம் படிக்க தனது ஒரு ஏக்கர் நிலத்தை விற்று வந்த பணத்தில் சீட் வாங்கி மருத்துவம் படிக்க அனுப்பி வைத்தார். மேலும் இரண்டு ஆண்டுகள் கிஷ்ணமூர்த்தி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியால் தனது மகளை படிக்க வைத்தவருக்கு இந்த ஆண்டு சிறிது கூட தன்னிடம் பணம் இல்லாமல் பல்வேரு தரப்பினும் உதவி கேட்டவருக்கு தோல்வியே மிஞ்சியது.
இதனால் வீட்டில் தனியாக இருந்த மருத்துவ மாணவி கிருத்திகா மற்ற தோழிகள் கல்வியை தொடரும் போது தான் மட்டும் வருமையால் மருத்துவ படிப்பை தொடர முடியவில்லையே என மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள விஷச் செடியான அரளிவிதையை அரைத்து குடித்துள்ளார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வறுமையின் காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாத காரணத்தினால் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாணவியின் செயல் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.