< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
21 Jun 2023 12:18 AM IST

காரைக்குடியில் செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார் .

காரைக்குடி,

காரைக்குடி பகுதியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகள் பிளஸ்-2 படித்துள்ளார். இந்நிலையில் அவர் செல்போனில் அதிக நேரம் செலவிட்டதால் அவரது பெற்றோர் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டனர். மாணவி செல்போனை கேட்டும் பெற்றோர் கொடுக்காததால் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மாணவியோடு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் மாணவி கேட்கவில்லை. பேசி கொண்டிருக்கும்போதே அம்மாணவி குதிக்க முற்பட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் தீயணைப்புத்துறையினர் அம்மாணவியின் கையை பிடித்து இழுத்து மேலே தூக்கி காப்பாற்றினர். சில நொடிகள் தாமத்திருந்தாலும் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்