கள்ளக்குறிச்சி
மாணவன் மாணவி தற்கொலை முயற்சி
|10 ம் வகுப்பு தேர்வில் தோல்வி மாணவன் மாணவி தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் சந்தப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகள் அம்மு(வயது 15). இவர் சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தோல்வியடைந்த அம்மு மனமுடைந்து எறும்பு மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அம்முக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அதேபோல் முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் முத்துவேல்(16). திருக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து வீட்டில் இருந்த தலை வலி மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டார். இதில் மங்கி விழுந்த முத்துவேலை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேற்கண்ட 2 தற்கொலை முயற்சி சம்பவங்கள் குறித்தும் திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.