சிவகங்கை
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
|சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்சிவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் சிவகங்கையில் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளியில் குரலிசை (வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், தவில், நாதசுவரம், தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகிய பாடபிரிவுகளில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இதில் 12 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின் பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தவில், நாதசுவரம் வகுப்புகளில் சேர கல்வித்தகுதி தேவை இல்லை. பயிற்சிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். பயிற்சிக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும். பயிற்சியில் சேருபவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டை, கல்வி உதவித்தொகை (மாதம் ரூ.400-) மற்றும் அரசு மாணவா் விடுதி வழங்கப்படு்ம். இசைக்கல்வியில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தலைமையாசிரியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி, 47, சத்தியமூர்த்தி தெரு, சிவகங்கை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.