திருவண்ணாமலை
அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை
|50 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை
திருவண்ணாமலை
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை செய்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வருகிற 20-ந்தேதி கடைசி நாளாகும்.
எனவே, திருவண்ணாமலை அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருவண்ண மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்திற்கு வருகை புரிந்து சேர்க்கை தொடர்பான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவை கொண்டுவர வேண்டும்.
இரண்டாண்டு தொழிற் பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், ஓராண்டு தொழிற் பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும் கல்வி தகுதி ஆகும். 14 வயது முதல் அரசு நிர்ணயத்தவாறு வயது வரம்பும் இருக்க வேண்டும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.