< Back
மாநில செய்திகள்
அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்

தினத்தந்தி
|
14 Jun 2023 12:15 AM IST

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2-வது கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தலைமை தாங்கினார். துறைத் தலைவர்கள் ெஜயா, சுந்தர், ராபின்சன் ஜேபஸ், உமையாள் பார்வதி, ராஜாசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் மதியழகன் வரவேற்றார்.

கலந்தாய்வு கூட்டத்தில் பாடவாரியாக மாணவ-மாணவிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு படிப்பதற்கான அட்மிஷன் ஆணையை வழங்கினார். முடிவில் பேராசிரியர் அருள்முகிலன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்