< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 26-ந் தேதி நடக்கிறது
|23 Oct 2022 12:15 AM IST
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டின் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் எஞ்சியுள்ள இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடக்கிறது. பாட வாரியாக உள்ள காலியிடங்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. TNGASA என்ற இணையதள முகவரியில் இக்கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே காலியாக உள்ள பாடப்பிரிவுகளின் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். இந்த தகவலை கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.