< Back
மாநில செய்திகள்
கடலூர்  பார்வையற்றோர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் பார்வையற்றோர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

தினத்தந்தி
|
18 Jun 2022 10:53 PM IST

கடலூர் பார்வையற்றோர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.


கடலூர் வில்வநகரில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பள்ளியில், பார்வையற்றோருக்கான சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு, செயல்படுகிறது. இந்த பள்ளியில் 5- வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.


மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் இப்பள்ளியில் கல்வி, இசைப்பயிற்சி, உணவு, தங்குமிடம், சீருடை, கல்விஉதவித்தொகை, இலவச பஸ் பாஸ் மற்றும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள், அனைத்தும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. இசை ஆசிரியர் மூலம் சிறப்பான இசை கற்றுத்தரப்படுகிறது.

தற்போது இப்பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை தலைமை ஆசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, நெல்லிக்குப்பம் ரோடு, கடலூர்-607001 என்ற முகவரியிலோ அல்லது 04142-210635, 7010168587, 9943623462 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்