மதுரை
கண்களை கட்டி சைக்கிள் ஓட்டிய மாணவர்
|்கண்களை கட்டி சைக்கிள் ஓட்டிய மாணவர் சாதனை படைத்துள்ளார்.
திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த இளையராஜா- கலைச்செல்வி ஆகியோரது மகன் அஸ்வின் (வயது 15). இவர் திருநகரில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். உலக சாதனையாளராக ஆக வேண்டும் என்பது அஸ்வினுக்கு விருப்பம். இதற்காக தனது மூளையை ஒரு நிலைப்படுத்தக்கூடிய தனித்திறனில் தன்னை தயார்படுத்தி வருகிறார்
அதில் ஒன்றாக டிஸ்யூபேப்பரால் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு ஒவியம் வரைகிறார். தன்முன் எந்த பொருளை காட்டினாலும் அதை தெள்ள, தெளிவாக சொல்கிறார். மேலும் ரூபாய் நோட்டில் உள்ள எண்கள், ஆதார் கார்டு எண்கள் என்று காண்பிக்ககூடிய எந்த எண்கள் என்றாலும் சரியாக சொல்லி ஆச்சரியத்தில் அசத்துகிறார். இதை காட்டிலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள், பைக்கை ஓட்டுகிறார். நேற்று திருநகரில் மாஸ்டர் பிரைன் அகாடமி மற்றும் ஜாக்கி புக் ஆப் வெல்டு ரெக்கார்ட்ஸ் சார்பி மாணவர்களுக்கான புதிய உலக சாதனை முயற்சி நடந்தது. அதில் அஸ்வினும் கலந்துகொண்டு கண்களை மூடி தனித்திறனை வெளிப் படுத்தினார். உலக சாதனை முயற்சிக்கான சான்றிதழ், பதக்கம், பெற்றார். அவரை மாஸ்டர் பிரைன் ஆக்டீவேசன் பயிற்சியாளர் அகிலா பாராட்டினார்.