< Back
மாநில செய்திகள்
தேனி அருகே குடோனில் பதுக்கியரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

தேனி அருகே குடோனில் பதுக்கியரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது

தினத்தந்தி
|
15 May 2023 12:15 AM IST

தேனி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.2½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனி அருகே அரண்மனைப்புதூரில் பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி அவர் வைத்திருந்த மூட்டையை சோதனையிட்டனர். அதற்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில் அவர் அல்லிநகரம் மண்டுகருப்பணசாமி கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் மகன் கவுதம் (வயது 20) என்பது தெரியவந்தது. அவர் அந்த புகையிலை பொருட்களை தேனியை சேர்ந்த நவரத்னவேல் (41) என்பவரிடம் வாங்கியதாகவும், மேலும் சில மூட்டைகளை அரண்மனைப்புதூரை சேர்ந்த கண்ணன் (28) மூலமாக ஒரு குடோனில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்பேரில் அரண்மனைப்புதூரில் உள்ள குடோனில் போலீசார் சோதனையிட்டனர். அங்கும் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதம், நவரத்னவேல், கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள 23 மூட்டை புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.98,880 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்