< Back
தமிழக செய்திகள்
15 நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தம் - போக்குவரத்து தொழிற்சங்கம் நோட்டீஸ்
தமிழக செய்திகள்

15 நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தம் - போக்குவரத்து தொழிற்சங்கம் நோட்டீஸ்

தினத்தந்தி
|
19 July 2022 10:23 PM IST

அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், கடந்த 11 ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற 5-வது கட்ட பேச்சுவார்த்தையில் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் தொடர்பாக அறிவிப்பு நோட்டீஸ் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனரிடம் இன்று வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் துணை தலைவர் சங்கரன், 15 நாட்களுக்குள் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்