< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு போலி டோக்கனுடன் வந்தால் கடும் நடவடிக்கை  - மதுரை எஸ்.பி.
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு போலி டோக்கனுடன் வந்தால் கடும் நடவடிக்கை - மதுரை எஸ்.பி.

தினத்தந்தி
|
14 Jan 2023 11:42 PM IST

ஜல்லிக்கட்டு போட்டிக்கு போலி டோக்கனுடன் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை எஸ்.பி. சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி 16-ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தொடா்பாக, அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனா்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு போலி டோக்கனுடன் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை எஸ்.பி. சிவபிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டில் டோக்கன் எண் வரிசைப்படி காளைகள் அவிழ்த்துவிடப்படும். முன்பதிவு செய்து முறையான அனுமதி சீட்டுடன் வருவோர் மட்டுமே ஜல்லிகட்டில் அனுமதிக்கப்பட்டுவர். விதிகளை மீறி காளைகள் இடையில் சேர்த்தாலோ, தடுப்புகளை சேதப்படுத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிகட்டு நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்