< Back
மாநில செய்திகள்
ஆபாச செயலிகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை
மாநில செய்திகள்

ஆபாச செயலிகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

தினத்தந்தி
|
16 Sept 2023 9:45 PM IST

ஆபாச செயலிகள் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை இழக்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு,

இது குறித்து ஈரோடு மாவட்ட பெருந்துறை காவல் ஆய்வாளர் மசூதா பேகம் கூறியதாவது,

க்ளோக்கோண்டோ எனும் செயலி ஒன்று உள்ளது .இதில் பெண்கள் மீது தவறான எண்ணம் கொண்ட நபர்களை தேடி பிடித்து அவர்களுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் பெண்களின் தவறான படங்களை அனுப்புகின்றனர். பின்னர் பெண்களை வைத்து அந்த நபர்களை ஏமாற்றி குறிப்பிட்ட ஒரு நம்பரை அனுப்புகின்றனர். இதில் பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இதில் தவறான எண்ணம் கொண்ட நபர்கள் சிலர் இதனை உண்மை என நம்பி அந்த எண்ணுக்கு பணத்தை அனுப்புகின்றனர்.பணம் அனுப்பியவுடன் அந்த நம்பர் செயலில் இருக்காது பேசிய நபர்களையும் தொடர்பு கொள்ள முடியாது. இது முற்றிலும் ஏமாற்றும் ஒரு செயலி. எனவே பொது மக்கள் யாரும் இந்த செயலியினை பதிவிறக்கம் செய்து ஏமாற வேண்டாம்.

குறிப்பாக சிறுவர்களை இந்த செயலி மூலம் குறிவைத்து ஏமாற்றுகின்றனர். எனவே சிறுவர்களை தொடர்ந்து பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.மேலும் இந்த செயலியின் மூலம் யாரேனும் ஏமாற்றப்பட்டிருந்தால் அவர்கள் புகார் தெரிவிப்பதன் மூலம் ரகசியமாக சைபர் கிரைம் மூலம் விசாரணை செய்து மர்ம நபர்களை கைது செய்யலாம் , என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்