< Back
மாநில செய்திகள்
மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை - ராமநாதபுரம் எஸ்.பி. எச்சரிக்கை
மாநில செய்திகள்

'மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை' - ராமநாதபுரம் எஸ்.பி. எச்சரிக்கை

தினத்தந்தி
|
23 Feb 2023 8:45 PM IST

மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் மதுரையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை மீன்பிடி படகுகளில் ஏற்றிச் சென்ற போது, படகில் இருந்து விழுந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளரும், படகோட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேவிப்பட்டினம், சேதுக்கரை, கீழக்கரை, திருப்பாலைக்குடி, தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்றும், மீறி அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் செய்திகள்