< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை

தினத்தந்தி
|
11 Oct 2023 12:15 AM IST

திருக்கோவிலூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை போலீசார் எச்சரித்தனர்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசும்போது, திருக்கோவிலூர் போலீஸ் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. போலீசாரும் அவ்வப்போது புகார் கூறப்பட்ட கடைகளுக்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டு அங்கு வைத்திருக்கும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சில கடைக்காரர்கள் தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலை தொடருமானால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் சம்வந்தப்பட்ட தாசில்தாருக்கு பரிந்துரை செய்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார். முன்னதாக சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வரவேற்றார். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோனிகுரூஸ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்