கள்ளக்குறிச்சி
விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை
|விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை என்று கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி:
விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகிறது. வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நிலத்தின் உரிமையாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக மின்சார வேலி அமைக்கின்றனர். எதிர்பாராத விதமாக மனிதர்கள் மற்றும் வன உயிரினங்கள் இந்த மின் வேலியில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைக்கக் கூடாது. மீறி மின் வேலி அமைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.