< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
மின்சார வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை :போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
|1 Oct 2023 12:15 AM IST
விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நிலத்தின் உரிமையாளர்கள் மூலம் சட்டத்துக்கு புறம்பாக மின்சார வேலிகள் அமைக்கப்படுகின்றன. அந்த மின்சார வேலியில் எதிர்பாராதவிதமாக மனிதர்கள் மற்றும் வன உயிரினங்கள் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக, சட்டத்துக்கு புறம்பாக விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.