< Back
மாநில செய்திகள்
சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை

தினத்தந்தி
|
8 Oct 2023 12:16 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சரகத்திற்கு உட்பட்ட திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள கொரிப்பள்ளம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கலந்து கொண்டு பேசுைகயில், தமிழக ஆந்திர எல்லை பகுதியிலுள்ள இந்த கிராமத்திற்கு வரும் அன்னிய நபர்கள் பற்றியும் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் குறித்தும் போலீசுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், சாராயம் விற்றல், காய்ச்சுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய்குமார், இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்